
நொம்பென் , ஜூலை 31 – தாய்லாந்து ராணுவத்தால் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது 20 வீரர்களை விடுவிக்க, தற்போது போர் நிறுத்த அமலாக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பார்வையாளராகவும் செயல்படும் மலேசிய ஆயுதப் படைகளின் உதவியை கம்போடியா கோரியுள்ளது.
பிடிபட்ட அனைத்து வீரர்களையும் விடுவிக்க மூத்த கம்போடிய இராணுவ அதிகாரிகள் தாய்லாந்து ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் ஹுன் மானெட்டின் (Hun Manet ) ட்டின் அறிக்கையை மேற்கோள் காட்டி கம்போடிய அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, மலேசிய ஆயுதப்படைகளின் தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ முகமது நிஜாம் ஜாபரிடமிருந்தும் ( Mohd Nizam Jaffar ) கம்போடியா உதவியை நாடுகிறது. அவர் தற்போது போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவை வழிநடத்துகிறார்.
தாய்லாந்து ராணுவம் தற்போது தனது காவலில் உள்ள எங்களது அனைத்து ராணுவ வீரர்களையும் விரைவில் கம்போடியாவிற்கு திருப்பி அனுப்ப முடியும் என்று உண்மையிலேயே நம்புவதாக மானெட் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை முயற்சிக்கு உதவுமாறு கம்போடிய ஆயுதப் படைகளின் தளபதி ஜெனரல் வோங் பிசென் மலேசியாவிடம் அதிகாரப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது