Latestமலேசியா

ராயா அன்பளிப்பு: அரசு ஊழியர்களுக்கு மார்ச் 13-ல் RM500 சிறப்பு நிதியுதவி

ராயா அன்பளிப்பு: அரசு ஊழியர்களுக்கு மார்ச் 13-ல் RM500 சிறப்பு நிதியுதவி

புத்ராஜெயா, பிப்ரவரி-24,

ரமலான் மற்றும் நோன்புப் பெருநாளை ஒட்டி அனைத்துக் கூட்டரசு ஊழியர்களுக்கும் சிறப்பு நிதியுதவியாக RM500 வழங்கப்படுகிறது.

ஒப்பந்தப் பணியாளர்கள் உட்பட, Gred 15 மற்றும் அதற்குக் கீழ்பட்ட அனைத்து ஊழியர்களும் மார்ச் 13-ஆம் தேதி இதனைப் பெறுவர்.

இது அரசு ஊழியர்களின் நலனுக்காகவும், அவர்களின் விழாக் கால தயார் நிலைக்கு உதவும் வகையிலும் வழங்கப்படுவதாக, பொதுச் சேவைத் துறை அறிக்கையொன்றில் கூறியது.

அதே சமயம் ஓய்வுப் பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு RM250 வழங்கப்படுகிறது.

இதற்கிடையில், பேராக் மாநில அரசும் அதன் ஊழியர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாநிலத்தின் அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் _‘duit raya’_ அன்பளிப்பாக RM1,500 வழங்கப்படுகிறது.

மொத்தம் RM16.9 மில்லியன் செலவினத்தை உட்படுத்திய இந்த உதவி மார்ச் 16-ஆம் தேதி வழங்கப்படும்.

இதில் மாநில ஆசிரியர்கள், OBJ, KAFA ஆசிரியர்கள், JPKK தலைவர்கள், MySTEP பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பயனடைவர் என மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ Saarani Mohamad கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!