Latestமலேசியா

ரோன்95 பெட்ரோல் மானியத்தைக் இலக்காகக் கொண்ட மக்களின் வகைப்பாடு அடுத்த ஆண்டு மத்தியில் அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், டிச 10 – RON95 பெட்ரோல் மானியத்தை இலக்காகக் கொண்ட மக்களின் வகைப்பாடு குறிப்பாக T15 தரப்பினருக்கு , 2025 ஆம் ஆண்டின் மத்தியில் அறிவிக்கப்படும் என பொருளாதார அமைச்சர் Rafizi Ramli கூறினார்.

Padu முக்கிய தரவுத் தளத்தில் இன்னும் பதிவு செய்யாதவர்களுக்கும், பதிவு செய்துவிட்டு மேல்முறையீடு செய்ய தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டவர்களுக்கும் இந்த அறிவிப்பு ஒரு வாய்ப்பு வழங்கும் என அவர் தெரிவித்தார்.

மேல்முறையீடுகளுக்கு ஒரு வழிமுறை இருக்கும், எனவே இது பின்னர் எரிவாயு நிலையத்தில் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு முதலில் கண்டறியப்பட வேண்டும்.

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் செயல்படுத்துவதற்கான வகைப்படுத்தல் நிர்ணயம் முதலில் முடிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது Rafizi Ramli தெரிவித்தார்.

RON95 பெட்ரோல் மானியத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய உதவிகளைப் பெறுவதற்கான அணுகுமுறை குறித்து புத்ரா ஜெயா பெரிக்காத்தான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர் Radzi Jidin கேட்ட கேள்விக்கு பதில் அளித்தபோது Rafizi Ramli இத்தகவலை வெளியிட்டார்.

RON95 மானியத்தின் இலக்கு நிகர செலவழிப்பு வருமானத்தின் அம்சத்தை கணக்கில் எடுத்துக்கொள்கிறது என்பதோடு 85 விழுக்காடு மக்கள் மானியத்திற்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!