Latestமலேசியா

லிப்பிஸ் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துக்களில் இருவர் மரணம்

லிப்பிஸ், மார்ச் 13-லிப்பிஸ் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வெவ்வேறு விபத்துக்களில் இருவர் மரணம் அடைந்தனர். கம்போங் மெராபோவிற்கு அருகிலுள்ள ஜாலான் லிப்பிஸ்-மெராபோ 95 ஆவது கிலோமீட்டரில் , மதியம் 1.30 மணியளவில் நடந்த முதல் சம்பவத்தில், பெரோடுவா கஞ்சில் கார் விரைவு பேருந்துடன் மோதியது.

இந்த சம்பவத்தில் அக்கார் ஓட்டுநரான 66 வயது ஆடவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்த வேளையில் காயத்திற்குள்ளான அவரது பிள்ளை சிகிச்சைக்காக கோலா லிப்பிஸ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Ismail Man தெரிவித்தார்.

15 பயணிகளை ஏற்றிச் சென்ற விரைவு பேருந்து, கிளந்தான், கோத்தா பாருவிலிருந்து சிலாங்கூர், கிள்ளானுக்கு சென்று கொண்டிருந்தபோது அந்த விபத்து ஏற்பட்டது.

இதனிடையே கம்போங் லென்டாங்கிற்கு அருகிலுள்ள ஜாலான் லிப்பிஸ்-ஜெரான்டுட், சாலையில் 18 ஆவது கிலோமீட்டரில் பிற்பகல் மணி 2.28க்கு நடந்த இரண்டாவது விபத்தில் மலாக்காவின் புக்கிட் கட்டிலைச் சேர்ந்த டிரெய்லர் ஓட்டுநர் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் சிக்கி இறந்தார்.

அந்த விபத்தில் காயம் அடைந்த Isuzu லோரி ஓட்டுனர் சிகிக்சைக்காக கோலா லிப்பிஸ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். எனினும் இந்த விபத்தில் சிக்கிய Honda Jazz கார் ஓட்டுநர் காயம் அடையவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!