
புத்ராஜெயா, செப்டம்பர்-25,
சபா மாநில உயர்மட்ட தலைவர் ஒருவரை சம்பந்தப்படுத்தி சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகியுள்ளது தொடர்பில் உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி அதனை உறுதிப்படுத்தினார்.
அந்த வீடியோவில், சம்பந்தப்பட்ட தலைவர் ஒரு மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் கையூட்டுப் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தத் தகவலை Albert Tei என்ற வர்த்தகர் அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து வாக்குமூலம் பெறுவது உட்பட, விசாரணை முழுமையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும் எனவும் அசாம் பாக்கி உத்தரவாதமளித்தார்.
எனவே, ஆதாரமற்ற யூகங்கள் விசாரணையை பாதிக்கக்கூடாது என்பதால், MACC-க்கு வழிவிட்டு பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.