Latestமலேசியா

லெஜெண்டரி ரைடர்ஸ் கிளப் மற்றும் இண்டிகோ ஹோட்டல் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் வீடற்றவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் அன்பளிப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் -22, லெஜென்டரி ரைடர்ஸ் கிளப் (Legends Riders) மற்றும் இண்டிகோ ஹோட்டல் இணைந்து கோலாலம்பூர் கோத்தா ராயா பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றோருக்கு நேற்று முன்தினம் உணவுப் பொட்டலங்கள் வழங்கினர்.

சமூகக் கடப்பாட்டிலான இந்த நிகழ்வு இண்டிகோ ஹோட்டலின் தலைமை மனிதவள நிர்வாகி
மற்றும் லெஜென்டரி ரைடர்ஸ்
தலைவர் மொஹைதீன் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.

அதில் சுமார் 30 பேர் கலந்து கொண்டு, ஆதரவற்றோருடன் கரிசனையோடு பழகி அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினர்.

தெருவோரங்களில் ஆதரவற்று கிடக்கும் மக்களின் நிலை கண்டு, தன்னார்வலர்கள் சிலர் மனம் நெகிழ்ந்து கண் கலங்கினர்.

நாதன் என்பவர், அந்நிகழ்வுக்கு காஜாங்கிலிருந்து தன் பிள்ளைகளையும் அழைத்து வந்திருந்தார்.

வாழ்க்கையின் மறுபக்கத்தை பிள்ளைகளுக்கு
அடையாளம் காட்டுவதும், தங்களை விட பேறு குறைந்தவர்களுக்கு உதவும் மனப்பான்மையை ஊட்டுவதுமே அதன் நோக்கம் என்றார் அவர்.

அந்நிகழ்வு லெஜென்டரி ரைடர்ஸ் மலேசியா நிறுவனர் மகேந்திரமணி ராகவனின் நன்றியுரையோடு இனிதே முடிவுற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!