
ஷா அலாம் – பிப் 26- ஷா அலாம் Jalan Persiaran Mokhtar Dahari, Alam Budiman னில் பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று கவிழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த லோரி கடுமையாக சேதம் அடைந்ததோடு அதில் இருந்த பழங்களும் காய்கறிகளும் சாலையில் சிதறிக் கிடந்த காட்சி சமூக வலைத்தலங்களில் வைரலானது.
இந்த விபத்து நேற்று மதியம் ஒரு மணியளவில் நிகழ்ந்ததாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ( Ramsay Embol ) தெரிவித்தார். அந்த லோரியை
20 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவர் 30 வயதுடைய மற்றொரு நபரின் உதவியோடு பீடோரிலிருந்து ஷா அலாமை நோக்கி ஓட்டி வந்ததாக விசாரணயில் தெரியவந்தது.
பிரேக்கில் ஏற்பட்ட பிரச்சனையே இந்த விபத்திற்கு காரணம் என நம்பப்படுவதோடு லோரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த லோரி கவிழ்ந்தது . ஓட்டுநர் லோரியில் சிக்கிக்கொண்டதால் தீயணைப்பு மீட்புப் படை வீரர்களின் உதவியோடு அவர் மீட்கப்பட்டார்.
ஓட்டுநரும் உதவியாளருரும் தலை மற்றும் காலில் காயம் அடைந்ததால் சிகிச்சைக்காக அவர்கள் ஷா அலாம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.



