Latestமலேசியா

வங்சா மாஜூவில் ‘வெடிப்பு’ ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானத்தை நிறுத்துமாறு DBKL உத்தரவு

வங்சா மாஜூ, நவம்பர்-9,கட்டுமான அமைப்பில் ஏற்பட்ட ‘வெடிப்பைத்’ தொடர்ந்து, வங்சா மாஜூவில் வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டமொன்றின் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துமாறு கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL உத்தரவிட்டுள்ளது.

J Satine குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் தொடர்பில் வங்சா சாரி PPR குடியிருப்பாளர்கள் புகார் கொடுத்திருப்பதால், அவ்வுத்தரவு வெளியிடப்பட்டதாக DBKL தனது அறிக்கையில் கூறியது.

கட்டுமானத்தில் உள்ள அக்கட்டடத்தின் 8-வது மாடியிலும் அதற்கும் மேலும் உள்ள வீடுகளின் shear wall வெட்டு சுவர், தூண்கள் மற்றும் தரைகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

எனவே, J Satine குடியிருப்பின் மொத்த கட்டுமான அமைப்பும் பாதுகாப்பாக உள்ளதா என்பதை கண்டறிய, சுயேட்சை பொறியியல் நிறுவனத்தை அழைத்துச் சோதனையிடுமாறு மேம்பாட்டாளர் பணிக்கப்பட்டுள்ளார்.

சோதனை முடிந்ததும் முழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்

அவ்வறிக்கை கிடைத்த பிறகே, கட்டுமான அமைப்பில் வெடிப்பும் விரிசலும் ஏற்பட்டதற்கான காரணம் தெரிய வருமென DBKL கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!