வசதி குறைந்த மாணவர்களின் பதிவு கட்டணம் செலுத்தும் கால அவகாசத்தை பல்கலைக்கழகங்கள் ஒத்திவைக்க வேண்டும் – உயர்கல்வி அமைச்சர்
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 19 – பல்கலைக்கழகங்களில் பயில வரும் ஏழை மாணவர்களின் பதிவு கட்டணம் செலுத்தும் கால அவகாசத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று அனைத்துப் பல்கலைக்கழக நிர்வாகங்களையும் கேட்டுக் கொள்வதாக உயர்கல்வி அமைச்சர் ஜம்ரி அப்துக் காடீர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குத் தேசிய உயர்கல்வி நிதிக் கழகம் மூலம் ஆரம்ப கல்விக்கான உதவியை ஏற்பாடு செய்யுமாறு பல்கலைக்கழகங்களுக்கும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.
முதலில் மாணவர்களின் பதிவைப் பல்கலைக்கழகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கான தொட்டக்கக் கட்ட உதவியை PTPTN மூலம் செய்து தரப்படும் என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஏழை மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர நிதி நெருக்கடிகள் தடையாக இருக்கக் கூடாது.
சிறப்பான தேர்ச்சி பெற்று நிதிச் சுமையால் பல்கலைக்கழகங்களில் சேர முடியாத நிலை இருக்கக் கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார்.