
வாஷிங்டன், ஆகஸ்ட்-6 – இந்தியப் பொருட்களுக்கான வரி விகிதத்தை அடுத்த 24 மணி நேரங்களில் அதிரடியாக உயர்த்தப் போவதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு 25 விழுக்காடு விதிப்பதாக 2 நாட்களுக்கு முன் அறிவித்தவர், புது டெல்லி மீதான தனது ‘திடீர்’ சீற்றத்தை தற்போது மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா, அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதோடு, வாஷிங்டனுடன் குறைவாகவே வர்த்தம் செய்கிறது.
ஆனால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது.
இது ஒரு சிறந்த வர்த்தகப் பங்காளிக்கு அழகல்ல.
“எனவே, அடுத்த 24 மணி நேரங்களில் நாம் என்ன செய்யப் போகிறேன் என்பதை பாருங்கள்” என ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
நட்பு நாடான இந்தியாவை ‘திடீர்’ பகை நாடாக ட்ரம்ப் நடத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியா இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.