
ராலேய், ஜனவரி-3 – வட கரோலினா மாநிலத்தில், ISIS தீவிரவாத சித்தாந்தத்தால் தூண்டப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை, அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையான FBI முறியடித்துள்ளது.
சந்தேக நபரான 18 வயது இளைஞன் Christian Sturdivant கைதுச் செய்யப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அவன், புத்தாண்டு தினத்தில் ஒரு மளிகைக் கடை மற்றும் துரித உணவகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தான்.
கத்தி மற்றும் சுத்தியலைக் கொண்டு 20 பேரை காயப்படுத்தி, பின்னர் சம்பவ இடத்துக்கு வரும் போலீஸாரையும் தாக்க அவன் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
‘நியூ யோர்க் தாக்குதல் 2026’ என்ற தலைப்பில் தாக்குதல் குறித்த விவரங்களை கனக்கச்சிதாக அவன் கைப்பட எழுதியக் குறிப்பையும் FBI கைப்பற்றியுள்ளது.
சுமார் ஒரு வருடமாக அவன் அத்தாக்குதலைத் திட்டமிட்டிருந்தான்; ஆனால் மாறுவேடத்தில் இகசியமாக அவனது நடமாட்டத்தை கண்காணித்த FBI அதிகாரிகள், அவன் செயல்படுவதற்கு முன்பே கைதுச் செய்தனர்.
தற்போது, ISIS‑க்கு ஆதரவு அளித்த குற்றச்சாட்டில் அவன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில், பொது மக்கள் எந்த நேரத்திலும் ஆபத்தில் இல்லை என நீதித்துறை உறுதிப்படுத்தியது.



