
கோலாலம்பூர், ஜூலை-27 – பேராக்கின் லூமூட் மற்றும் கெடாவின் குப்பாங்கில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சோதனைகளில், பாதுகாக்கப்பட்ட பல்வேறு வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உயிருள்ள 20 சோலைபாடி பறவைகளும், ஓர் இராட்சத உடும்பும் அவற்றிலடங்கும்.
சோலைபாடி பறவைகள், வளமான மற்றும் இனிமையான குரலுக்காக அறியப்படும் கூண்டுப் பறவைகளாகும்.
புக்கிட் அமான் போலீஸின் வனவிலங்கு குற்றப்பிரிவு, PERHILITAN எனப்படும் வனவிலங்குகள் மற்றும் தேசியப் பூங்காக்கள் துறை, ஊராட்சி மன்றங்கள் ஆகியவை அதில் களமிறங்கின.
இதையடுத்து மொத்தமாக 5 ஆடவர்கள் விசாரணைக்காகக் கைதாகினர்.
7 காட்டுப் பன்றிகளின் சடலங்கள், 148 பேக்கேட்டுகளில் அடைக்கப்பட்ட நீர் உடும்புகளின் உடல் பாகங்கள், 80 பேக்கேட்டுகளில் அடைக்கப்பட்ட காட்டுப் பன்றி இறைச்சிகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
தவிர, ஒரு துப்பாக்கி, 30 தோட்டாக்கள், பயன்படுத்தப்பட்ட 40 தோட்டா உறைகள், bullet belt எனப்படும் தோட்டிக்களை மாட்டும் இடைவாரும் கைப்பற்றப்பட்டன.
புலி நகங்களால் செய்யப்பட்ட 2 பதக்கங்களுடன் கூடிய ஒரு நெக்லஸ், காட்டுப்பன்றியின் வடிவமாக இருக்கும் மண்டை ஓடு துண்டுகள், நீர் உடும்புகளின் பித்தம் அடங்கிய 23 குப்பிகள் போன்றவையும் பறிமுதல் ஆகின.