
மீரி – ஜூலை-28 – 2025 Bridgestone ASEAN அமெச்சூர் கோல்ஃப் போட்டி என்றும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்களுடன், சரவாக், மீரி கோல்ஃப் கிளப்பில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இப்போட்டியின் நான்காவது தொடரான இது, கிழக்கு மலேசியாவில் நடப்பது இதுவே முதன் முறையாகும். மொத்தமாக மாலைப் பிரிவில் 116 விளையாட்டாளர்களும், புதிதாகச் சேர்க்கப்பட்ட காலைப் பிரிவில் கூடுதலாக 56 பேரும் போட்டியில் பங்கேற்றனர்.
தென்கிழக்காசியா முழுவதும் முன்னணி அமெச்சூர் கோல்ஃப் தொடராக ஒன்பதாவது ஆண்டாகத் தொடரும் இந்த Bridgestone போது கோல்ஃப் போட்டி வேகமாக பிரபலமடைந்து வருவதை, பங்கேற்பாளர்களின் இவ்வெண்ணிக்கை எடுத்துக் காட்டுகிறது.
18 குழிகளுடன் stableford வடிவிலான இந்த ஒரு நாள் போட்டியில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்ப்பை மீறியிருப்பதாக, Bridgestone Golf-ஃபின் வட்டா பங்காளியான Prestige Gold Sdn Bhd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வாசுதேவன் கிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தார்.
பங்கேற்பாளர்களு RM500-க்கும் மேற்பட்ட மதிப்புள்ள பிரீமியம் Bridgestone goodie bag பரிசுப் பைகள் வழங்கப்பட்டன; இதில் போட்டிக்கான உடைகள், கையுறைகள், தொப்பிகள் மற்றும் Bridgestone Extra Soft கோல்ஃப் பந்துகள் உள்ளிட்டவை அடங்கும்.
அதிர்ஷ்டக் குலுக்குப் பரிசுகளாலும் கோல்ஃப் மைதானத்தில் உற்சாகம் பெருகியது. Nett Champion வெற்றியாளராக Yew Wen Jaan, Gross Champion வெற்றியாளராக Hassan Bin Rahmat-டும் வாகை சூடினர். இந்த Bridgestone ASEAN அமெச்சூர் கோஃல்ப் போட்டி அடுத்து ஆகஸ்ட் 3-ல் கெடா, Permaipura Golf Country Club-பில் நடைபெறுகிறது.