Latestமலேசியா

வாத்து, அன்னப் பறவை இறகுகள் பற்றாக்குறை பூப்பந்துக்கான இறகுப் பந்து நெருக்கடியை பி.எம்.எப் எதிர்நோக்கியுள்ளது

கோலாலம்பூர், ஏப் 10 – பேட்மிண்டன் போட்டிகளில் செயற்கை செட்டல்கொக் (இறகுப் பந்து ) பயன்பாட்டைச் சோதிக்க அனைத்துலக பேட்மிண்டன் சம்மேளனம் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், பேட்மிண்டன் உலகம் தற்போது ஒரு பெரும் மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஒரு திடீர் முடிவு அல்ல, மாறாக உலகச் சந்தையில் இயற்கை இறகுகளின் விநியோகத்தில் அதிகரித்து வரும் கடுமையான நெருக்கடியின் விளைவே இதற்கு காரணமாகும் .

பாரம்பரியமாக, உயர்தர பூப்பந்துகள் வாத்து மற்றும் அன்னப்பறவை இறகுகளிலிருந்து தயாரிக்கப்பட்டு வந்துள்ளன.

இருப்பினும், அதிகரித்து வரும் உலகளாவிய தேவையும் விநியோகச் சிக்கல்களும் இந்த மூலப்பொருளைப் பெறுவதை கடினமாக்கியுள்ளன.

மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், அந்த இறகுகளின் தரமும் சீரற்றதாகி, தொழில்முறை ரீதியிலான செயல்திறனைப் பாதித்து வருகிறது.

ஒரு நீண்ட காலத் தீர்வாக, அனைத்துலக பேட்மிண்டன் சம்மேளனம் இப்போது செயற்கை பூப்பந்து பயன்பாட்டிற்கு வழி வகுக்கிறது.

உயர்மட்டப் போட்டிகளில் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்வதற்கு முன்பு,தொடக்கக்கட்ட சோதனைகள் பிரபலம் இல்லாத போட்டிகளில் பயன்படுத்தப்படும் செயற்கை இறகுகள் அதிக நீடித்து உழைக்கும் தன்மை, சீரான செயல்திறன் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும்.

இருப்பினும், செயற்கை இறகுகளின் உணர்வும் பயணப் பாதையும் இயற்கை இறகுகளுக்கு இணையாக இருப்பதை உறுதி செய்வதே முக்கிய சவாலாகும்.

இந்த மாற்றம், குறிப்பாக நீண்ட காலமாக இயற்கை இறகுகளையே நம்பி இருக்கும் தொழில்முறை வீரர்களிடமிருந்து, பலதரப்பட்ட எதிர்வினைகளைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிலர் இதை ஒரு முக்கியமான புதுமையாகக் கருதுகின்றனர், மற்றவர்களோ இது பூப்பந்து விளையாட்டின் உள்ளுணர்வையே மாற்றிவிடும் என்று அஞ்சி, சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!