
கோலாலம்பூர், ஜூலை 23 – கோலாலம்பூரிலிருந்து சீனா செங்டுவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில், பயணிகளுக்கிடையே மோதல் ஏற்பட்ட காணொளி வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
கேபின் விளக்குகள் அடைக்கப்பட்ட பிறகும், பெண்கள் குழு ஒன்று சத்தமாக பேசுவதை நிறுத்த மறுத்ததால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.
அப்பெண்களின் பின் வரிசையில் அமர்ந்திருந்த ஆண் பயணி ஒருவர், தான் தூங்க வேண்டுமென்பதற்காக அவர்களை மெதுவாக பேச கேட்டுக்கொண்டுள்ளார்.
பின்பு தகராறு முற்றி போய் அவர்களை அந்த ஆடவர் “முட்டாள்” என்றும் “வாயை மூடு” என்றும் கூறியதைத் தொடர்ந்து, நிலைமை மேலும் மோசமாகி இருக்கையின் கீழ் புறம் பதுங்கியிருந்த நபரை மீண்டும் மீண்டும் அந்தப் பெண் குத்துவதைக் காணொளியில் காண முடிந்தது.
சண்டையை முடிவுக்குக் கொண்டுவர கேபின் குழு உறுப்பினர்கள் விமானத்தை தரையிறக்கினர் என்றும் சீனா சிச்சுவான் பொதுப் பாதுகாப்புப் பணியகத்தின் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்றும் அறியப்படுகின்றது.
Mid-air fight, breaks out , passengers, Kuala Lumpur,Chengdu, AirAsia ,flight