வான்குடை தரையிறக்கம் தவறாக நடந்ததால் அதிரடைப்படை வீரர் காயம்

மலாக்கா, டிச 30 – ஞாயிற்றுக்கிழமை வான்குடை தரையிறக்கம் தவறாக நடந்ததால் அதிரடிப்படை வீரர் ஒருவரின் விலா எலும்புகள் உடைந்து, கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சிறப்புப் போர் பயிற்சி மையத்தைச் சேர்ந்த கார்ப்பரல் சம்பந்தப்பட்ட அந்த சம்பவத்தின் ஏழு வினாடி வீடியோ வைரலாகியுள்ளது. GGK எனப்படும் சிறப்புப் படைப்பிரிவின் 60வது ஆண்டு விழாவை ஒட்டி நடைபெற்ற வான்குடை வீரர் குதிக்கும் கண்காட்சியின்போது பங்கேற்ற அதிரடிப்படை வீரர் இந்த பாதிப்புக்கு உள்ளானார்.
அதிரடிப்படை வீரர்களில் ஒருவர் காற்றில் போராடி சுழன்று, பின்னர் அதிவேகத்தில் தரையிறங்கி விபத்துக்குள்ளாகியதோடு , ராணுவ ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு பணியில் இருந்த பல வீரர்கள் அவருக்கு உதவியதாக இச்சம்பவத்தை நேரில் கண்டவர்களில் ஒருவரான Shahmi என்பவர் தெரிவித்தார்.
சுங்கை உடாங்கில் ( Sungai Udang ) உள்ள Terendak முகாமில் உள்ள பயிற்சி மையத்தில் உதவி பயிற்றுவிப்பாளராக இருக்கும் அந்த அதிரடைப் படைவீரர் தற்போது மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



