
ஷா அலாம், மார்ச் 6-சபா பெர்ணம் , சுங்கை பெசாரில் வான வெடிகளை விற்பனை செய்யும் வளாகத்தின் கூடாரத்தில் ஏற்பட்ட தீவிபத்தை தொடர்ந்து ஆடவர் ஒருவர் கால்களில் தீக்காயங்களுக்கு உள்ளானார்.
நேற்று நண்பகல் மணி 2.55 அளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் 26 வயது ஆடவர் ஒருவர் இரு கால்களிலும் காயங்களுக்கு உள்ளானார்.
தீயணைப்பு சாதனத்தை பயன்படுத்தி அந்த வளாகத்தின் வர்த்தகர் தீயை அணைத்ததாக சபா பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan முகமட் யூசோப் அகமட் தெரிவித்தார்.
தீ பரவுவதை தடுப்பதற்காக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சுங்கை பெசார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தண்டனைச் சட்டத்தின் 285 ஆவது விதியின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.



