Latestமலேசியா

விஜயலட்சுமியின் குடும்பம் இந்தியா புறப்படும் முன்பே கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் RM30,000 நன்கொடை ஒப்படைக்கப்பட்டது – சாலிஹா

கோலாலம்பூர், செப்டம்பர்-6 – கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வில் குடும்பத் தலைவியை பறிகொடுத்த கணவரும் மகனும் இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பே, அவர்களுக்கு நன்கொடையாக 30 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டன.

அந்நன்கொடைகள், கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL), வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் கொடுக்கப்பட்டவையாகும்.

கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தஃபா( Dr Zaliha Mustafa) அதனை உறுதிபடுத்தினார்.

ஒரு நியாயமான தொகையை அவர்களிடத்தில் நன்கொடையாக வழங்கினோம் என்றார் அவர்.

அக்குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் பரிந்துரை கடந்த புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுமென, சாலிஹா முன்னதாகக் கூறியிருந்தார்.

48 வயது விஜயலட்சுமியைத் தேடி மீட்கும் பணிகள், முக்குளிப்பு வீரர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் 9-வது நாளோடு நிறுத்தப்பட்டது.

இதையடுத்து கணவர் மாத்தையா, மகன் சூர்யா மற்றும் விஜயலட்சுமியின் சகோதரி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா புறப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!