வாஷிங்டன், செப்டம்பர் -11 – விண்வெளியில் முதல் வணிகமய நடைப்பயணத்தை (comercial spacewalk) மேற்கொள்ளும் முயற்சியில் 2 பெண்கள் உள்ளிட்ட 4 பொது மக்கள் அடங்கியக் குழுவை Space X விண்ணுக்குப் பாய்ச்சியுள்ளது.
விண்வெளியில் நடக்க தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ள முதல் முயற்சி இதுவாகும்.
மோசமான வானிலையால் ஆகஸ்டில் பல முறை ஒத்தி வைக்கப்பட்ட பிறகு ஒருவழியாக செவ்வாய்க்கிழமை பின்னேரம் Polaris Dawn விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சப்பட்டது.
அமெரிக்க தொழில்நுட்பத் துறை கோடீஸ்வரர் Jared Issacman தலைமையில், Space X நிறுவனத்தின் ஊழியர்களான 2 பொறியியலாளர்கள் மற்றும் ஒரு முன்னாள் ஆகாயப்படை போர் விமானி ஆகிய இதர மூவரை அவ்விண்கலம் ஏற்றிச் சென்றுள்ளது.
இது ஒரு தைரியமான அதே சமயம் அபாயகரமான பயணம் என்பதை இலோன் மாஸ்கின் Space X அறியாமல் இல்லை.
எனவே உரிய தடுப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அது உத்தரவாதம் வழங்கியுள்ளது.
இந்த 5 நாள் விண்வெளிப் பயணமானது, செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லாமல் முதல் விண்கலத்தை அனுப்ப Space X கொண்டுள்ள திட்டத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.