
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 31 – பெட்டாலிங் ஜெயா டாமான்சாரா டாமாயிலுள்ள தனியார் கால்நடை மருத்துவ மைய உரிமையாளர் ஒருவர், தனது பக்குவமற்ற பராமரிப்பால் பூனை மற்றும் நாய் ஒன்று உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கில் இன்று பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் அக்குற்றத்தை மறுத்துள்ளார்
குற்றப்பத்திரிகைபடி, அவர் கடந்த டிசம்பரில் மருத்துவமனையில் இருந்த இரு விலங்குகளையும் முறையான பராமரிப்பு இல்லாமல் விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இக்குற்றத்திற்கு குறைந்தது 20,000 ரிங்கிட் முதல் 100,000 ரிங்கிட் வரை அபராதமும், மூன்று ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நீதிமன்றம் அந்த ஆடவருக்கு 8,000 ரிங்கிட் ஜாமீனை விதித்து அவரது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது. மேலும் வழக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கவும், வழக்கறிஞரை நியமிக்கவும் பிப்ரவரி 4 தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பூனை மற்றும் நாய் சடலங்கள் மருத்துவ மையத்தில் கிடந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டனர். அக்காணொளியில் அசுத்தமான சூழல், சேதமடைந்த கூண்டுகள், குப்பை மற்றும் விலங்கு மலம்சேகரம் தென்பட்டதாக கூறப்பட்டது.



