
கோலாலம்பூர், ஜனவரி 22 – கடந்த நவம்பர் மாதம் , விளையாட்டு செய்தியாளரான Haresh Deol மீது தாக்குதல் செய்த R. கிரிஷ்ணனுக்கு
நீதிமன்றம் 2,000 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது.
அபராதம் செலுத்தப்படாவிட்டால் மூன்று மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்படுமென்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
நவம்பர் 25 ஆம் தேதியன்று பங்சார் Jalan Telawi-யில் கிரிஷ்ணனும் மற்றொரு நபரும் Haresh-ஐ தாக்கியுள்ளனர். அந்த சம்பவத்தை இன்னொரு நபர் தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரேஷ் டீயோல், TwentyTwo13 என்ற இணைய செய்தி தளத்தை தொடங்கியவர்களில் ஒருவராவார். அவர் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை சமூக ஊடகத்தில் முன்னதாக பதிவு செய்திருந்தார்.



