Latestமலேசியா

விழாக்காலத்தில் இலவச டோல் கட்டணம் இலக்கிடப்பட்ட தரப்பினருக்கு கிடைப்பதற்கு விரிவான ஆய்வு – அன்வார்

டாவோஸ் , ஜன 23 – பண்டிகைக் காலங்களில் இலக்கிடப்பட்ட தரப்பினர் மட்டுமே இலவச டோல் சலுகை பெறுவது குறித்து அரசாங்கம் விரிவாக ஆராய்ந்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். இலவச டோல் வசதியை அனைத்து தரப்பினரும் பெறாமல் குறைந்த வருமானம் பெறும் B40 மற்றும் நடுத்தர வருமானம் பெறும் M40 தரப்பினர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்தும் இதற்கு முந்தைய மானிய ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ், மசராட்டி ( Maserati ) போன்ற ஆடம்பர கார்கள் உட்பட அனைவருக்கும் பெருநாள் காலத்தில் இலவச டோல் சலுகை ஏன் வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்புபவர்கள் உள்ளனர். எனவே, குறைந்த வருமானம் பெறும் மக்கள் நன்மையை பெறும் வகையில் அவர்களுக்கு உதவி கிடைப்பது குறித்த பரிந்துரைகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த விவகாரம் விரிவாக ஆராய்ப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் மின்சாரம் மற்றும் எண்ணெய் உதவித் தொகைக்கான மானிய வசதி பெறுவதை தொடர முடியாது என்ற அடிப்படைக் கொள்கையை மட்டுமே பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி இதற்கு முன்பு கூறியிருந்தார். 2025 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார கருத்தரங்கின் ஆண்டு உச்சநிலை மாநாட்டின் இறுதியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது அன்வார் இத்தகவலை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!