புத்ராஜெயா, ஜனவரி-25, விழாக்காலத்தை ஒட்டி இறக்குமதியாகும் மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் மீது, சுகாதார அமைச்சான KKM நவம்பர் முதலே சிறப்பு கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் அனைத்து 70 நுழைவாயில்களிலும் அக்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டுக்குள் கொண்டு வரப்படும் அந்த ஆரஞ்சுப் பழங்கள் தர நிர்ணயக் கட்டுப்பாட்டைப் பூர்த்திச் செய்திருப்பதை உறுதிச் செய்வதே அதன் நோக்கமாகும்.
அக்கண்காணிப்பின் போது தோராயமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 243 ஆரஞ்சுப் பழ மாதிரிகளில், 9 பழங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தைப் பூர்த்திச் செய்யவில்லை.
இதையடுத்து அவை அழிக்கப்பட்டன.
கடந்தாண்டு மாண்டரின் ஆரஞ்சுப் பழங்களை அதிகளவில் மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்த நாடுகளாக சீனா, ஜப்பான், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, எகிப்து ஆகியவைத் திகழ்வதாக KKM கூறியது.