
கோலாலாம்பூர், டிசம்பர் 15-சிலாங்கூர் மற்றும் கோலாலாம்பூரின் சில பகுதிகளில் தற்போது திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பெட்டாலிங் ஜெயா, செக்ஷன் 8, மலாயாப் பல்கலைக் கழகம், புக்கிட் டாமான்சாரா, மௌண்ட் கியாரா, மிட்வெலி பேரங்காடி, Pavilion Damansara, TRX போன்ற இடங்களில் மின்வெட்டு பதிவாகியுள்ளது.
அதனை உறுதிப்படுத்திய TNB3 நிறுவனம், பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாகக் கூறியது.
தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு இடையூறால் ஏற்படும் அசௌகரியத்திற்கு வருந்துவதாகவும் TNB அறிக்கையொன்றில் தெரிவித்தது.
மின்சாரம் எந்த நேரத்திலும் வழக்க நிலைக்குத் திரும்பலாம் என்பதால், இந்தத் தடங்கலின் போது மின்சாரப் பொருட்களை மிகவும் கவனமுடன் கையாளுமாறு, பயனீட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Kelana Jaya, Kayu Ara, Ara Damansara, SS2 போன்ற இடங்களும் பாதிக்கப்பட்டதாக, சமூக ஊடகங்களில் மக்கள் பதிவேற்றம் செய்தனர்.
அதே சமயம் Bandar Utama, Tropicana போன்ற இடங்களில் மின்சார விநியோகம் வழக்கத்திற்குத் திரும்பியிருப்பதாகவும் சில வலைத்தளவாசிகள் கூறினர்.



