
குவைத், ஆகஸ்ட் 14 – கடந்த சனிக்கிழமை முதல். குவைத்தில் கெட்டுப்போன மதுவை அருந்தியதால் கடந்த சில நாட்களில் குவைத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் சிலருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றதென்று உள்ளூர் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் சிலருக்கு குருட்டுத்தன்மை அல்லது பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
1964 ஆம் ஆண்டு குவைத் அரசு மது இறக்குமதியைத் தடை செய்த நிலையில், நாட்டில் மது தொடர்பான சட்டங்கள் மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.