
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – தலைநகரிலுள்ள ஒவ்வொரு வீடமைப்பு திட்டங்களிலும் பல மாடிகள் கொண்ட பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கபட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
3,000 க்கும் மேற்பட்ட வீடுகளை உள்ளடக்கிய திட்டங்களில், குடியிருப்பாளர்களின் வசதிக்காக பாலர் பள்ளி முதல் இடைநிலைப் பள்ளி வரையிலான கல்வி வசதிகளை வழங்க வேண்டுமென்று பண்டார் தாசிக் பெர்மைசூரி வீடமைப்பு திட்ட தொடக்க விழாவில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அரசு நிறுவன டெவலப்பர்கள் மற்றும் நகர்ப்புற திட்டமிடுபவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் ஒரு திட்டத்தை செயல்படுத்த இயலும்.
மேலும் டெவலப்பர்கள் கூடுதல் செலவுகளைச் சுமக்காமல் இருக்க பல்வேறு வசதிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘விலயா அமன் லுமாயன் ரெசிடென்சி’ திட்டம் 300,000 ரிங்கிட் விலையில் 3,438 வீடுகளை கட்டவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.