Latestமலேசியா

வீட்டின் கல் கட்டமைப்பில் எம்.பி.வி வாகனம் மோதி ஓட்டுநர் மரணம்

ஷா அலாம், ஏப் 27 – பண்டமரான், ஜாலான் புக்கிட் கெராயோங்கில் நேற்று
ஒரு வீட்டின் மூலையில் இருந்த கல் கட்டமைப்பில் மோதி MPV கவிழ்ந்த சம்பவத்தில் அதன் ஓட்டுநரான முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இரவு சுமார் 8.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில், டொயோட்டா அவான்சா (Toyota Avanza )
வாகனத்தை ஓட்டிச் சென்ற 60 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் இறந்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் பல நபர்கள் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து அதைத் தள்ளுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதை தனது துறை முன்னரே கண்டறிந்ததாகத் தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் லி ஜிட் ஹூவே ( Lim Jit Huey) தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் ஜாலான் புக்கிட் கெராயோங்கிலிருந்து ஜாலான் பந்திங் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது ​​அவரது வாகனம் கட்டுபாட்டை இழந்து, சாலையோரத்தில் உள்ள ஒரு வீட்டின் மூலையில் இருந்த கல் கட்டமைப்பின் மீது மோதியதாக நம்பப்படுகிறது.

இந்த மோதலால், அந்த வாகனம்  ஒரு கால்வாய் ஓரத்தில் பக்கவாட்டில் கவிழ்ந்தது. வாகனத்தை நகர்த்த முயன்ற பொதுமக்களின் செயல்களால், அந்த வாகனம் பாதிக்கப்பட்டவருடன் கால்வாயில் விழுந்தது.

இந்த விவகாரம் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41 (1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் Lim Jit Huey கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!