
புத்ரா ஜெயா, ஜூலை 28 – இந்த வாரம் பீரங்கி வெடி சத்தத்தால் பீதி அடைய வேண்டாம் என்று தலைநகரில் வசிப்பவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மலேசிய ஆயுதப்படைகள் 2025 வீரர்கள் தின கொண்டாட்ட அணிவகுப்புடன் சடங்குப்பூர்வமான துப்பாக்கி மரியாதை குண்டுகளையும் முழங்கவிருக்கிறது.
மலேசிய ஆயுதப் படைகள் Precinct 1, தேசிய வீரர்கள் சதுக்கத்தில் முழு ஆடை ஒத்திகை மற்றும் பிரதான நிகழ்வின் போது சடங்குப்பூர்வ துப்பாக்கி குண்டுகளை வெடித்து மரியாதை செலுத்தும் என மாவட்ட போலீஸ் தலைவர் அய்டி ஷாம் முகமட் ( Aidi Sham Mohamad ) தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை ஜூலை 29 ஆம் தேதி ஒத்திகையின் போது இரண்டு சுற்றுகள் துப்பாக்கி தோட்ட முழக்கம் நடைபெறும். ஜூலை 29 ஆம் தேதி 21 முறை துப்பாக்கி சூடுகள் முழங்கப்படும் என்பதோடு ஜூலை 31ஆம்தேதி இரண்டு அமர்வுகளும் காலை 8 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெர்சியாரன் சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜீஸ் ஷா, ( Persiaran Sultan Salahuddin Abdul Aziz Shah ), லெபு பெர்டானா தீமோர் ( Lebh peradana Timur ). மற்றும் காம்ப்ளக்ஸ் E அருகே சுற்றியுள்ள பாதைகளில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை நெரிசலை எதிர்பார்க்கலாம் என சாலை பயனர்களுக்கு Aidi ஆசோசனை தெரிவித்தார்.
இதனால் பொதுமக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, எந்தவிதமான சிரமத்தையும் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார். போக்குவரத்து நெரிசலை நிர்வகிக்க காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருப்பார்கள்.