Latestமலேசியா

7-நாட்கள், 9 மலைகள்: மலேசிய சாதனை முயற்சியை ஜோகூரில் தொடங்கினார் லோகசந்திரன்

செகாமாட், ஆகஸ்ட்-25 – பேராக்கைச் சேர்ந்த 26 வயது லோகசந்திரன் ராமசந்திரன் என்ற தனியார் பல்கலைக்கழக மாணவர், மலேசியாவில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாக, 7 மாநிலங்களில் 9 மலைகளை ஏழே நாட்களில் தனியாளாக ஏறும் முயற்சியை இன்று தொடங்கியுள்ளார்.

1,276 மீட்டர் உயரம் கொண்ட ஜோகூர், கூனோங் லேடாங் மலையில் (Gunung Ledang) அவரின் சாதனைப் பயணம் தொடங்கியது.

9 மணி 9 நிமிடங்களில் முதல் இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ள லோகசந்திரனிடம் அந்த அனுபவம் குறித்து கேட்டறிய வணக்கம் மலேசியா அவரைத் தொடர்புகொண்ட போது…

சக மலையேறியாகவும் உடன் வருபராகவும் துணை நின்ற சகோதரர்கள் உதயசந்திரன் மற்றும் சாத்திஷ் இருவர் இல்லாமல், Gunung Ledang மலையை ஏறும் முயற்சி முழுமையடைந்திருக்காது என்றும் அவர் சொன்னார்.

இம்முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளதோடு உடன் செல்லும் வழிகாட்டியாக Izham என்பவரை அனுப்பியதற்காக, இந்த நேரத்தில் Taman Negara Johor-வுக்கு லோகசந்திரன் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிலையில், நாளை, நெகிரி செம்பிலான் கூனோங் டத்தோ (Gunung Datuk) மலையில் அவர் ஏறவிருக்கிறார்.

அது குறித்த தகவல்களை வணக்கம் மலேசியா நாளை உங்களுக்காகக் கொண்டு வரும்.

கோவிட் காலத்தில் பொழுதுபோக்காகத் தொடங்கிய இவரின் மலையேறும் நடவடிக்கை, இன்று மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியாக வளர்ந்து நிற்கிறது.

ஜோகூர், நெகிரி செம்பிலான் அடுத்து சிலாங்கூர், பஹாங், திரங்கானு, கெடா, பேராக் ஆகிய மாநிலங்களில் இவரின் இந்த சாதனை முயற்சித் தொடரும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!