Latestமலேசியா

டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆதரவில் சுங்கை சிப்புட் பூர்வக்குடி மக்கள் பங்கேற்ற விளையாட்டுத் திருவிழா

சுங்கை சிப்புட், பிப்ரவரி-2 – ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் ஆதரவில் பேராக் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பூர்வக்குடி மக்களுக்காக ‘Sen Oi Ek’ விளையாட்டுத் திருவிழா சிறப்பாக நடந்தேறியுள்ளது.

3 நாள் கொண்டாட்டமாக நடைபெற்ற அவ்விழாவின் நேற்றைய இறுதி நாளில், Tok Batin கிண்ண ஒன்பதின்மர் கால்பந்துப் போட்டியும் நடைபெற்றது.

டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் சார்பில் சுங்கை சிப்புட் ம.இ.கா மக்கள் சேவை மையத்தின் நிர்வாகி அஷோக்குமார் மருதமுத்து பங்கேற்று நிகழ்வைத் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

சுங்கை சிப்புட் மட்டுமின்றி கிளந்தான், திரங்கானு, பஹாங் உள்ளிட்ட வெளிமாநிலக் குழுக்களும் அப்போட்டியில் கலந்துகொண்டன.

அதில் முதல் பரிசை Temakkah அணியும் இரண்டாம் பரிசை Santheh FC-யும் வென்றன.

அது தவிர, மகளிருக்கான Futsal போட்டி, பூர்வக்குடியினரின் பாரம்பரிய sumpit போட்டி உள்ளிட்டவையும் நடத்தப்பட்டன.

நிகழ்வின் சிறப்பம்சமாக தான் ஸ்ரீ விக்னேஸ்வரனின் சொந்த நன்கொடையாக 10,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.

சுங்கை சிப்புட் பூர்வக்குடியினருக்கு தொடர்ந்து வற்றாத ஆதரவை வழங்கி வரும் தான் ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு, கிராம மக்கள் நன்றியைப் புலப்படுத்தினர்.

அதோடு, விரைவில் தாங்கள் தொடங்கவுள்ள இயக்கத்திற்குப் புரவலராக இருந்து தங்களை வழிநடத்துமாறும் டான் ஸ்ரீயை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

டான் ஸ்ரீ விக்னேஸ்வரனும் அதனை மனமகிழ்வோடு ஏற்றுக் கொண்டதாக, சுங்கை சிப்புட் ம.இ.கா தொகுதித் துணைத் தலைவருமான அஷோக்குமார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!