
மனாமா (பஹ்ரேய்ன்), பிப்ரவரி-21 – துன் Dr மகாதீர் முஹமட்டை சந்திப்பதிலிருந்து எந்தவொரு வெளிநாட்டுத் தலைவரையும் அரசாங்கம் தடுக்கவில்லை.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மகாதீரின் நண்பர்கள் அவரைச் சந்திக்க விரும்பினால் சந்திக்கட்டுமே, அதைத் தடுப்பதால் அரசாங்கத்திற்கு என்ன நன்மை வந்துவிடப் போகிறது என பிரதமர் கேள்வி எழுப்பினார்.
தாய்லாந்து, ஜப்பான், இந்தோனீசியா, துருக்கி நாடுகளின் தலைவர்கள் அண்மையில் மலேசியா வந்தனர்; ஆனால் அவர்களில் ஒருவரும் மகாதீரைப் பார்க்க வேண்டும் என கேட்கவில்லை.
அப்படியே கேட்டிருந்தாலும் அதனை நான் மறுக்கப் போவதுமில்லை.
எனவே மகாதீரின் குற்றச்சாட்டை ஒரு பெரிய விஷயம் எனக் கருதி யாரும் பொருட்படுத்த வேண்டாம் என டத்தோ ஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்.
மலேசியா வந்த இரண்டு மூன்று வெளிநாட்டுத் தலைவர்களை, தம்மைச் சந்திக்க விடாமல் அன்வார் தடுத்ததாக, Apa Cerita எனும் போட்காஸ் பேட்டியின் போது, மகாதீர் குற்றம் சாட்டியிருந்தார்.