Latestமலேசியா

வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான MPV வாகனம்; இருவர் பலி

குளுவாங், ஆகஸ்ட் 6 -இன்று காலை, சிம்பாங் ரெங்காம் அருகே, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை கிலோமீட்டர் 68.3 இல், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்த பல்நோக்கு வாகனம் (MPV) ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

MPVயின் ஓட்டுநர் மற்றும் முன்பக்க பயணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் சம்பவ இடத்திலேயே அவ்விருவரும் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரத்தில், பின்புற பயணிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. மேல் விசாரணையோடு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழும் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதனிடையே, விபத்து தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!