
போபல், அக்டோபர்-3 – இந்தியா, மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவமொன்றில் 3 நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தையை, அரசுப் பள்ளி ஆசிரியர் தம்பதியர் உயிருடன் கல்லின் கீழ் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
38 வயதான பப்லு மற்றும் அவரது 28 வயது மனைவி ராஜ்குமாரி, மாநில அரசின் இரு குழந்தைகள் கொள்கையால் இருவருக்கும் வேலை போய்விடும் என்ற அச்சத்தில், புதிதாகப் பிறந்த நான்காவது குழந்தையை காட்டில் புதைத்துள்ளனர்.
ஆனால் அதிசயமாக, குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்ட கிராம மக்கள் உடனே அதனைக் காப்பாற்றினர்.
மருத்துவமனையில் குழந்தை தற்போது சிகிச்சை பெற்று வருகிறது.
ஏற்கனவே இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ள இந்த தம்பதியர், போலீஸாரிடம் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து இருவர் மீதும் கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய பிரதேசத்தில் அரசாங்க ஊழியர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பது சட்டமாகும்.