
ஷா ஆலம் – ஆகஸ்ட் 2 – கடந்த செவ்வாய்க்கிழமை, பெர்சியாரன் டத்தோ மென்தெரியில், சைக்கிள் ஓட்டும் கும்பல் ஒன்று கார் ஒன்றை சுற்றி வளைக்கும் காணொளி சமூக ஊடகத்தில் வைரலானதைத் தொடர்ந்து போலீசார் அக்கும்பலைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சைக்கிள் ஓட்டுநர்கள் சாலையின் இடது மற்றும் வலது பாதைகளில் சவாரி செய்துள்ளதை போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர் என்று ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் இக்பால் தெரிவித்துள்ளார்.
அந்த சைக்கிள் குழு வழியைத் தடுத்ததால் கார் ஓட்டுநர் காரின் வேகத்தைக் குறைத்தார் என்று அறியப்படுகின்றது.
இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள் போலீசாரை உடனடியாக அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.