Latestமலேசியா

ஷா ஆலாமில் கோழியைத் தீனியாக்கி முதலைக்குப் பொறி வைக்க ஏற்பாடு

ஷா ஆலாம், செப்டம்பர்-4, சிலாங்கூர், ஷா ஆலாம், செக்ஷன் 7 ஏரி பூங்காவில் நேற்று நடமாடியதாகக் கூறப்படும் முதலையை, கோழியைத் தீனியாக்கி பொறி வைத்து பிடிக்கும் முயற்சி இன்று மேற்கொள்ளப்படவிருக்கிறது.

Op Buaya Shah Alam திட்டத்தின் கீழ் அந்த செயற்கை ஏரிக் கரையில், இரு பொறிகள் வைக்கப்படவுள்ளன.
அவற்றில் ஒன்று நெகிரி செம்பிலான் PERHILITAN-னிடமிருந்து இரவல் வாங்கியதாகும்.

ஏரி கரையிலிருந்து 5 மீட்டர் தூரத்தில் அவை வைக்கப்படவிருக்கின்றன.

அப்பணிகளுக்கு, drone மற்றும் படகுகளைக் கொடுத்துவதவும் ஷா ஆலாம் மாநகர மன்றத்தைச் சேர்ந்த 20 பேரும் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று ஒரு நாள் அணுக்கமாக கண்காணித்ததில், முதலையின் நடமாட்ட பகுதியை ஓரளவுக்குக் கண்டறிந்து, அங்கு பொறி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைக்கு அந்த ஏரியில் 1.5 மீட்டர் நீளமுள்ள 1 முதலை மட்டுமே இருப்பதும் தெரிய வந்திருப்பதாக சிலாங்கூர் PERHILITAN இயக்குநர் சொன்னார்.

முதலை பிடிபட்டதும், Paya Indah Wetlands முதலைகள் சரணாயலத்திற்கு அது கொண்டுச் செல்லப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!