கோலாலம்பூர், அக்டோபர்-27, ஷா ஆலாம் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை விபத்தில் சிக்கியக் கார் தீப்பற்றிக் கொண்டதில், அதிலிருந்த மூவர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஸ்ரீ பெட்டாலிங் நோக்கிச் செல்லும் பாதையில் அதிகாலை 12.30 மணிக்கு அவ்விபத்து நிகழ்ந்ததாக மாநகர தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.
தகவல் கிடைத்ததும் ஸ்ரீ பெட்டாலிங் மற்றும் புக்கிட் ஜாலில் தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடம் விரைந்தன.
அதற்குள் காரோட்டியும் இரு பயணிகளும் சிறியத் தீப்புண் காயங்களுடன் காரிலிருந்து வெளியேறி தப்பினர்.