
கோலாலும்பூர், ஏப்ரல் 24- மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெட் சாடிக் ஷெட் அப்துல் ரஹ்மான் (Syed Saddiq Syed Abdul Rahman), குற்றவியல் நம்பிக்கை மீறல் (CBT), சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பணமோசடி செய்தல் போன்ற குற்றஞ்சாட்டிற்கான தண்டனையை, ரத்து செய்யக் கோரிய மேல்முறையீட்டின் முடிவைக் கண்டறிய இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
2023 நவம்பரில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட ஷெட் சாடிக்குக்கு (Syed Saddiq) ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் இரண்டு பிரம்படிகள் விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஷெட் சாடிக்கின் (Syed Saddiq) மேல்முறையீட்டின் முடிவு, ஜூன் 25ஆம் திகதியன்று வழங்குவதாக துணை அரசு வழக்கறிஞர் டத்தோ வான் ஷஹாருதீன் வான் லாடின் தெரிவித்தார்.
மேல்முறையீடு வெற்றி பெற்றால், ஷெட் சாடிக் (Syed Saddiq) விடுவிக்கப்படுவார் என்றும், நிராகரிக்கப்பட்டால், மேல்முறையீடு செய்ய அவருக்கு இன்னும் ஒரு கடைசி வாய்ப்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.