
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 12 – நேற்று ஸ்கூடாய் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் ஏற்பட்ட பலத்த புயலால், சுமார் 20 வீடுகள் சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தாமான் ஹார்மோனி 1, தாமான் ஸ்ரீ ஸ்கூடாய், கம்போங் போ சீ லெங், தாமான் ஸ்ரீ புடேரி மற்றும் கம்போங் லாட் ஆகியவை உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பெய்த கனமழைக்குப் பிறகு ஏற்பட்ட புயலால் வீட்டின் கூரைகள் பறந்தன என்று அறியப்படுகின்றது.
மேலும் மழைநீரால் வீட்டு உபகரணங்களும் வாகனங்களும் சேதமடைந்தன என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். புதிய கூரைகளை மாற்றுவதற்கு 10,000 ரிங்கிட் செலவாகுமென்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்கூடாய் மாநில சட்டமன்ற உறுப்பினர் மெரினா இப்ராஹிம், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து வீடு அல்லது வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் படங்களை எடுத்து, முதலில் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர் புகார் நகலை தங்கள் அலுவலகத்திற்கு அனுப்பலாம் என்றும் இதன் மூலம் மாவட்ட பேரிடர் குழுவிற்கு தகவல் அனுப்பி, உதவி மற்றும் நிவாரண நடவடிக்கைகளை எளிதாக்க முடியுமென்றும் அவர் கூறினார்.