ஸ்தாப்பாக், நவம்பர் -10
கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் உள்ள கட்டடமொன்றிலிருந்து விழுந்து வெளிநாட்டுப் பெண் உயிரிழந்தார்.
நேற்று மதியம் அச்சம்பவம் நிகழ்ந்தது.
27 வயது அப்பெண்ணின் சடலம் சவப்பரிசோதனைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அம்மரணத்தில் குற்றவியல் அம்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
எனவே அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக, வங்சா மாஜூ போலீஸ் உறுதிப்படுத்தியது