
ஸ்பெயின், ஜனவரி 19 – தென் ஸ்பெயினில் அதிவேக ரயில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர் என்றும் மேலும் 30 பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலகாவிலிருந்து (Malaga) மெட்ரிட் (Madrid) நோக்கிச் சென்ற இரியோ (Iryo) அதிவேக ரயில், புறப்பட்ட சுமார் 10 நிமிடங்களில் தடம் புரண்டு, எதிர்திசையில் வந்த ரயிலுடன் மோதியது. இதனால் அந்த வழித்தடத்தில் சென்ற மற்றொரு ரயிலும் தடம் புரண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ நேரத்தில் இரு ரயில்களிலும் சுமார் 400 பயணிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் (Pedro Sanchez) “நாட்டிற்கு மிகுந்த வேதனை அளிக்கும் சம்பவம்” என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது மாட்ரிட்–அந்தலூசியா (Madrid and Andalucia) இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.



