
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 17-சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கானில் Blue Water தோட்டமருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட Saraswathi கொலை வழக்கில், இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயா மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 26 வயது தகவல் தொழில்நுட்ப அதிகாரி கே. கார்த்திக் (K.Kaarthiek) மற்றும் 23 வயது லாரி ஓட்டுநர் ஏ. ஹரிபிரசாந்த் (A.Hariprasanth) மீது குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
அக்டோபர் 24 மற்றும் 25-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 24 வயதான Saraswathiயை அவர்கள் கொலைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் அதிகபட்சம் 12 பிரம்படிகள் விதிக்கப்படும்.
எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் வருவதால், அவ்விருவரிடமும் குற்ற ஒப்புதல் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
வழக்கு வரும் ஜனவரி 16-ம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.



