Latestமலேசியா

ஹம்சாவைப் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைக்கவில்லை – பாஸ் விளக்கம்

கோலாலம்பூர், அக்டோபர் -1,

பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியிலிருந்து பிரதமர் வேட்பாளர் குறித்து, அதில் எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் (Hamzah Zainudin) உட்பட யாரையும் பாஸ் (PAS) எப்போதும் பரிந்துரைக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியூடீன் ஹசன் (Takiyuddin Hassan) தெளிவுபடுத்தினார்.

சமூக வலைதளங்களில் பரவிய தகவலில், பாசின் தலைமை உட்பட ஹாடி அவாங், ஹம்சாவை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டிருந்தது.

இதை மறுத்த தக்கியூடீன், பிரதமர் வேட்பாளர் குறித்த விவகாரம் பாஸ் அல்லது PN கூட்டணியில் எப்போதும் விவாதிக்கப்படவில்லை என்றும் தங்களின் கவனம் 16 வது பொது தேர்தலில் வெற்றியடைந்து அதன் பின் பிரதமர் வேட்பாளர் பின்னர் தீர்மானிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டார்.

PN-இல் ஒருவரல்லாமல் பல்வேறு தலைவர்கள் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர் என்று கூறிய அவர் வலைத்தளத்தில் தற்போது பரவி வருகின்ற அந்த தகவல் உண்மையானதா என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.

பெர்சாத்து (Bersatu) கட்சித் தலைவர் முஹிடீன் யாசீன் கடந்த மாத கட்சி பொதுக்கூட்டத்தில் “11வது பிரதமர் வேட்பாளர்” என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சியில் உள்ள உட்பகை வெளிப்படத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!