
ஈப்போ, ஜூன்-20 – எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடினின் மாமியார் ஈப்போவில் உள்ள அவரது வீட்டில் நேற்றிரவு ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்தார்.
84 வயது Salmiah Nyak Matt சம்பவ இடத்திலேயே மாண்டதாக, பேராக் தீயணைப்பு – மீட்புத் துறை கூறியது.
ஹம்சாவின் 83 வயது மாமனார் Datuk Abdul Ghani Ngah மூச்சுத் திணறலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரவு 9 மணிக்கு மேல் அந்த இரட்டை மாடி வீட்டில் தீ ஏற்பட்ட போது 6 பேர் இருந்துள்ளனர்.
எஞ்சிய நால்வரான 18 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள், காயங்களின்றி உயிர் தப்பினர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டடு வருவதாக தீயணைப்புத் துறை கூறியது