
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-12,
மலாயாப் பல்கலைக் கழக இந்திய பட்டதாரிகளை ஒன்றிணைக்கும் குடும்ப விழாவாக CUMIG Nite 6.0 மாபெரும் ஒன்றுகூடல் விரைவில் நடைபெறவுள்ளது.
நவம்பர் 1-ஆம் தேதி சிலாங்கூர், சுபாங்கில் உள்ள Persada Plus Banquet Hall விருந்து மண்டபத்தில், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பல்வேறு அங்கங்களுடன் இந்த reunion ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“சிறப்பை ஒளிரச் செய்து, ஒற்றுமையை ஊக்குவிப்போம்” என்பதே இவ்வாண்டின் கருப்பொருளாகும்.
மூத்தோராக இருந்தாலோ, உற்சாகமுள்ள புதிய பட்டதாரியாக இருந்தாலோ— இந்த இரவு நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஓர் இனிய சந்திப்பாகும் என CUMIG உதவித் தலைவர் சிவமணி ராஜகோபால் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
படிப்பு முடிந்தும், இந்திய பட்டதாரிகளின் பங்களிப்பு பல்வேறு வகையில் தொடருவது பெருமையளிப்பதாக CUMIG ஆலோசகர் பேராசிரியர் Dr. கே. புண்ணியமூர்த்தி கூறினார்.
விரிவுரையாளர் Dr. ஜெகலக்ஷ்மி ஜீவரத்னமும் நிகழ்ச்சி ஏற்பாட்டை பாராட்டினார்.
இந்த இரவு வெறும் ஒன்றுகூடல் அல்ல; மாறாக சமூகத்தை உயர்த்தி நிறுத்தும் ஒற்றுமை, பரிவு மற்றும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாகும்.
எனவே, மலாயாப் பல்கலைக் கழக இந்திய பட்டதாரிகள் திரளாக இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்கின்றனர்