
கோலாலம்பூர், நவம்பர்-5,
நாட்டின் பொதுச் சேவையில் செப்டம்பர் 24 வரைக்குமான நிலவரப்படி 1.3 மில்லியன் பணியாளர்கள் உள்ளனர்.
போலீஸ் மற்றும் இராணுவ வீரர்களைத் தவிர்த்து, நிரந்தர உத்தரவாதங்களுடன் கூடிய அனைத்து பதவிகளையும் இது உள்ளடக்கியது.
ஆக அதிகமாக, கல்வி அமைச்சில் தான் 511,345 அல்லது மொத்த அரசு ஊழியர்களில் 39.15% வேலை செய்கின்றனர்.
அதற்கடுத்து சுகாதார அமைச்சில் 267,149 பேர் அல்லது 20.45% ஊழியர்களும், உயர் கல்வி அமைச்சில் 104,833 அல்லது 8% பேரும் பணிபுரிகின்றனர்.
இதிலிருந்து கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் முன்னணி வகிப்பதாக, மக்களவையில்
எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில், கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாலிஹா முஸ்தாஃபா கூறினார்.
மாநில நிர்வாக வாரியாக பார்த்தால், சபாவில் ஆக அதிகமாக 18,606 அரசு ஊழியர்கள் உள்ளனர்.
அடுத்தடுத்த இடங்களில் முறையே சரவாக், சிலாங்கூர், ஜோகூர், பேராக் ஆகிய மாநிலங்கள் உள்ளன.



