
அம்பாங், ஜூலை 4 – தனது 12 வயது மகளை கற்பழித்தாக சொந்த தாயின் காதலா மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. மேலும் அந்த குற்றத்திற்கு காதலனுக்கு உடந்தையாக இருந்ததாக அச்சிறுமியின் தாயார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இன்று அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் , நீதிபதி நோர்ஷிலா கமாருதின் ( Norshila Kamarudin ) முன்னிலையில் குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்டதால், நாசி லெமாக் விற்பனையாளர் அஸ்மான் ஹாசிம் (61) மற்றும் 37 வயது பெண் ஆகிய இருவரும் குற்றத்தை மறுத்தனர்.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் மாலை மணி 4 அளவில் , அம்பாங் , தாமான் செராயாவில் உள்ள ஒரு வீட்டில் அப்போது 12 வயது மற்றும் நான்கு மாத வயதுடைய சிறுமியை கற்பழித்ததாக அஸ்மான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. தண்டனைச் சட்டத்தின் 375ஆவது பிரிவு (g ) யின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு நிருபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம்.
தனது கண் முன்னாலேயே தனது மகளை அஸ்மான் பாலியல் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்ததாக அச்சிறுமியின் 37 வயதுடைய தாயார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
பாதுகாவலராகப் பணிபுரியும் அந்தப் பெண் மீது, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 109 மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 375 (g) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டதோடு இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரடிம்படி விதிக்கப்படும்.
குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஆகஸ்டு 7ஆம்தேதி நடைபெறும்.