
செப்பாங், ஜூலை 14 – நுழைவு தகுதியை நிறைவு செய்யத் தவறியதால் ஜூலை 11 ஆம்தேதி 131 வெளிநாட்டினர் மலேசியாவிற்குள் நுழைவதற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள MCBA எனப்படும் மலேசிய எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் தடைவிதித்தது.
சந்தேகத்திற்குரிய தங்குமிட முன்பதிவுகள், குடியேற்றத் துறைக்கு தெரிவிக்கத் தவறியது , மற்றும் அவர்கள் தங்குவதற்கு போதுமான நிதி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டதை மலேசிய எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் சுட்டிக்காட்டியது.
நிதித் திறன் உண்மையான நோக்கத்தின் முக்கிய அடையாளமாக இருப்பதோடு , . சில பார்வையாளர்கள் ஒரு மாதம் தங்குவதாகக் கூறியபோதிலும் அவர்களிடம் சுமார் 500 ரிங்கிட் மட்டுமே வைத்திருந்தனர். இது அவர்களின் நோக்கம் குறித்து சந்தேகங்களை எழுப்பியது என்று MCBA வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்த விதிமுறைகைள் அனைத்துலக குடியேற்றக் கொள்கைக்கு ஏற்ப இருப்பதோடு வருகையாளர்கள் தாங்கள் வருகை புரியும் நாட்டிற்கு ஒரு சுமையாக மாற மாட்டோம் என்பதை நிரூபிக்க வேண்டும்.
பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், விமான நிலையத்தில் அனைத்துலக பயணிகளின் வருகை முனையம் மற்றும் புறப்பாடு வாயில்களில் C1 முதல் C37 வரை 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டனர்.
அனுமதி மறுக்கப்பட்டவர்களில் 96 வங்காளதேச ஆண்கள், 30 பாகிஸ்தானிய ஆண்கள் மற்றும் நான்கு ஆடவர்கள் மற்று ஒரு பெண் ஆகியோரைக் கொண்ட ஐந்து இந்தோனேசியர்களும் அடங்குவர்.