Latestமலேசியா

142 தொண்டு நிறுவனங்களுக்கு RM2 மில்லியன் வழங்கிய டா மா சாய்

கோலாலாம்பூர், மார்ச்-6-4 இலக்க லாட்டரி நிறுவனமான டா மா சாய் ( Da Ma Cai), அதன் வருடாந்திர சமூக நல உதவி நல்லெண்ணத் திட்டத்தின் கீழ், நாடளாவிய நிலையில் 142 தொண்டு நிறுவனங்களுக்கு மொத்தம் RM2 மில்லியன் நிதி வழங்கியுள்ளது.

1994-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், இவ்வாண்டு 32-ஆம் ஆண்டை எட்டியுள்ளது.

பல ஆண்டுகளாக, நல்வாழ்வு இல்லங்கள் மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்புகளின் வசதிகளை மேம்படுத்தவும், பராமரிப்பு தரத்தை உயர்த்தவும் டா மாய் சாய் உதவி செய்து வருகிறது.

இவ்வாண்டுக்கான பங்களிப்பில், RM1.3 மில்லியன் முதன்மைத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட வேளை, மேலும் RM700,000 _“Give Luck Get Luck”_ சீன புத்தாண்டு நற்பணி முயற்சியின் மூலம் திரட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம், கடந்தாண்டு 115 அமைப்புகளிலிருந்து, இவ்வாண்டு 142 அமைப்புகளுக்கு உதவி விரிவடைந்துள்ளது.

கோலாலம்பூர் Ti-Ratana மலேசிய சமூக நலச் சங்கக் கட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில், RM812,000 நிதி 57 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது.

வட மற்றும் தென் மண்டலங்களுக்கு தனியாக நடைபெற்ற விழாக்களில், மேலும் 85 அமைப்புகள் பயனடைந்தன.

சமூக நலனுக்கான தனது கடப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தும் டா மா சாய், அதன் இலாபங்களை The Community Chest திட்டத்தின் வழியாக கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு கொடுத்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!