Latestமலேசியா

17 மில்லியன் மலேசியர்களின் MyKad தரவுகள் கசிவா? X தளத்தில் வெளியான பகீர் தகவல்

ஷா ஆலாம், டிசம்பர்-4, 17 மில்லியன் மலேசியர்களின் MyKad அடையாள அட்டைகளின் தரவுகள் கசிந்து, கள்ளச் சந்தையில் விற்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Fusion Intelligence Center @ StealthMole எனும் X தளக் கணக்கில் அது அம்பலமாகியுள்ளது.

கசிந்த MyKad அட்டைகளின் மாதிரிகள் அந்த கள்ளச் சந்தையில் பகிரங்கமாக பகிரப்பட்டுள்ளதாக அந்த X தளப் பக்கம் கூறியது.

தனிப்பட்ட விவரங்கள் இப்படி பேரளவில் கசிந்திருப்பதானது, பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இது அடையாளத் திருட்டு, நிதி மோசடி போன்ற கடுமையானக் குற்றங்களுக்கு இட்டுச் செல்லலாமென Fusion Intelligence Center ஐயம் தெரிவித்தது.

எனினும், இது பற்றி அரசாங்கத் தரப்பிலிருந்தோ போலீசோ இன்னும் கருத்துரைக்கவில்லை.

இதற்கு முன் 2022-ல் மே பேங்க், SPR எனப்படும் மலேசியத் தேர்தல் ஆணையம் மற்றும் துணைக்கோள ஒளிபரப்பு நிலையமான ஆஸ்ட்ரோ ஆகியவற்றின் 13 மில்லியன் பயனர்களின் சுயவிவரங்கள் கசிந்ததாக, Pendakwah Teknologi என்ற முகநூல் பக்கம் அம்பலப்படுத்தியிருந்தது.

பயனர்களின் பெயர்கள், பெற்றோரின் பெயர்கள், பிறந்த தினம், வீட்டு முகவரி, அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் அப்போது கசிந்ததாகக் கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!