Latestமலேசியா

1MBD வழக்கு; அதிகார துஷ்பிரயோகம் & பணமோசடி செய்ததில் நஜீப் குற்றவாளியே; நீதிமன்றம் தீர்ப்பு

புத்ராஜெயா, டிசம்பர் 26-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், 1MDB ஊழல் வழக்கில் குற்றவாளியே என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

4 அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள், 21 பணமோசடி குற்றச்சாட்டுகள் என அனைத்து 25 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவளியே என, உயர் நீதிமன்றம் அறிவித்தது.

2.28 பில்லியன் ரிங்கிட் பணம், 1MDB நிதியிலிருந்து அவரது தனிப்பட்ட AmBank வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

அப்பணம், அரேபிய அரச குடும்பம் கொடுத்த நன்கொடை என நஜீப் தரப்பு முன்வைத்த வாதம் பொய் என உறுதிச் செய்த நீதிபதி, 1MDB நிர்வாகமே சதி செய்து தம்மை ஏமாற்றி விட்டதாகக் கூறியதையும் நிராகரித்தது.

“உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத அளவுக்கு நீங்கள் ஒன்றும் ‘கிராமவாசி’ அல்ல. அப்போதைக்கு இந்நாட்டின் பிரதமர்” என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.

ஆக, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமானவை என தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்க நஜீப் தரப்பு முற்றாகத் தவறியிருப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே SRC International வழக்கில் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நஜீப், இப்போது கூடுதல் தண்டனைகளை எதிர்கொள்கிறார்.

இதன் வழி ஏழாண்டுகளாக நடைபெற்று வந்த 1MDB வழக்கில் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியை இழக்க முக்கியக் காரணமாகக் கூறப்பட்டு வந்த இந்த 1MDB முறைகேடு, உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய நிதிமோசடியாகப் பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!